ஸ்மிருதி மந்தனா அதிரடி! 2வது முறையாக WPL வெற்றிக் கோப்பையை கைப்பற்றிய RCB
6 மாசி 2026 வெள்ளி 06:48 | பார்வைகள் : 1951
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று பெங்களூரு அணி அசத்தியுள்ளது.
2026 ம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று வதோதரா BCA மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி கேப்பிடலஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் குவித்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 37 பந்துகளில் 57 ஓட்டங்கள் குவித்தார்.
மேலும் லாரா வோல்வார்ட் 44 ஓட்டங்களும், லிசெல் லீ 37 ஓட்டங்களும் குவித்தனர்.
204 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் தொடக்க வீரரான ஸ்மிருதி மந்தனா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 87 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார்.
அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஜார்ஜியா வொல்(Georgia Voll) 54 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தார்.
இதனால் பெங்களூரு அணி 19.4 ஓவர்கள் முடிவிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 204 ஓட்டங்கள் குவித்து இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்றது.
அத்துடன் இரண்டாவது முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் பெங்களூரு அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire