டி20 உலகக்கிண்ணத்தில் இருந்து விலகும் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்
6 மாசி 2026 வெள்ளி 13:36 | பார்வைகள் : 1774
பேட் கம்மின்ஸைத் தொடர்ந்து ஜோஷ் ஹேசில்வுட்டும் டி20 உலகக்கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து விலகியுள்ளார்.
2026 டி20 உலகக்கிண்ணத் தொடர் நாளை இந்தியா, இலங்கையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
பெப்ரவரி 11ஆம் திகதி நடைபெற உள்ள அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா விளையாட உள்ளது.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கு மேலும் ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood), தசைநார் காயத்தில் இருந்து மீள்வதற்கு போதிய கால அவகாசம் இல்லாததால் இந்தத் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை உடனடியாக அறிவிக்காது. ஏனெனில், எதிர்காலத்தில் நிலைமைகள் எப்படி அமைகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, தொடரின் மத்திய மற்றும் பிந்தைய கட்டங்களில் ஹேசில்வுட் அணியில் இணைவார் என்று நம்பியது.
இதுகுறித்து தேர்வாளர் டோனி டோட்மேட் கூறுகையில், "சூப்பர் 8 சுற்றுக்குள் ஜோஷ் போட்டிக்கு தேவையான உடற்தகுதியுடன் திரும்புவார் என்று நாங்கள் நம்பினோம்.
ஆனால், சமீபத்திய அறிகுறிகளின்படி அவர் குணமடைய இன்னும் சிறிது காலம் ஆகும் என்றும், அவரது சிகிச்சை முறையை விரைவுபடுத்துவது அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிகிறது" என்றார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire