டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழப்பவர்களுக்கு இழப்பீடு: ரிசர்வ் வங்கி பரிசீலனை
7 மாசி 2026 சனி 05:13 | பார்வைகள் : 1617
டிஜிட்டல் மோசடியில் குறைந்தளவு பணத்தை இழப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, மக்கள் இடையே டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது. அதே போல் டிஜிட்டல் மோசடி சம்பவங்களும் தினமும் நடந்து வருகிறது. யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் என அனைத்து வழிகளிலும் மோசடி நடக்கிறது. மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஓடிபி கேட்டும், லிங்க்களை அனுப்பி பணத்தை பறிக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன.
டிஜிட்டல் கைது மூலம் பணத்தை சுருட்டும் சம்பவமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும் மோசடியாளர்கள் புதுப்புது வழிகளை கண்டறிந்து பணத்தை திருடும் முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டு இருக்கின்றனர்.
சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டாலும்,அது மோசடியில் இழந்த பணத்தில் குறைந்தளவுதான் உள்ளது.
இந்நிலையில், டிஜிட்டல் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கையை அறிவித்து உள்ளது.
மும்பையில் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், \u003c/b\u003eடிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் வெளியிடுவோம்.
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் சிறிய அளவில் ஏற்படும் இழப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகள் வெளியிடப்படும். இதற்காக 2017 ல் வெளியிடப்பட்ட வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் ஆய்வு செய்யப்படும்.அதன்படி சிறியளவு மோசடி பணப்பரிவர்த்தனைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிமுறைகள் விரைவில் பொது மக்களின் ஆலோசனைக்காக வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire