l’Arc de Triompheஇல் பரபரப்பு: place de l’Étoile முடக்கம்??
6 மாசி 2026 வெள்ளி 18:14 | பார்வைகள் : 5030
இன்று காலை, பரிஸின் place de l’Étoile மற்றும் l’Arc de Triomphe சுற்றிய பகுதி பரபரப்பாக இருந்தது. 17-ஆவது வட்டாரத்தில், place de l’Étoile-இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு வீட்டில், 21 வயது இளைஞர் ஒருவர் இதய-மூச்சுத் தடை ஏற்பட்ட நிலையில் இருந்ததால், பரிஸ் தீயணைப்பு படையினர் அவசரமாக அழைக்கப்பட்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கையில் ஹெலிகாப்டர் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர் படுத்த நிலையிலேயே இருக்க வேண்டியதால், குறுகிய படிக்கட்டுகள் வழியாக அவரை வெளியேற்ற முடியவில்லை. அதனால், தீயணைப்பு படையினர் ஜன்னல் வழியாக ஹெலிகாப்டர் மூலம் அவரை வெளியேற்றி, place de l’Étoile-இற்கு கொண்டு சென்றனர்.
அந்த பகுதி சுமார் 30 நிமிடங்கள் காவல்துறையால் மூடப்பட்டது. பின்னர் அவர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதும், போக்குவரத்து மீண்டும் இயல்புக்கு வந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan