T20 உலக கிண்ணம் - வேறு அணிகளில் 3 கேப்டன்கள் உட்பட 40 இந்திய வம்சாவளியினர்
7 மாசி 2026 சனி 13:40 | பார்வைகள் : 2003
2026 T20 உலக கிண்ணத்தில் 3 கேப்டன்கள் உட்பட 40 இந்திய வம்சாவளியினர் இந்தியா தவிர்த்து பிற அணிகளில் விளையாட உள்ளனர்.
2026 T20 உலக கிண்ண தொடர் வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி தொடங்கி மார்ச் 6 ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளது. இதில், இந்தியா தவிர்த்து மீதமுள்ள 19 அணிகளில் மொத்தமாக 40 இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிகபட்சமாக கனடா அணியில், மொத்தமுள்ள 15 பேரில் 11 பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். கனடா அணியின் அணித்தலைவர் தில்பிரீத் பஜ்வா பஞ்சாபில் பிறந்தவர் ஆவார்.
2020 ஆம் ஆண்டு கனடாவுக்கு இடம் பெயர்ந்த அவர், 2023 ஆம் ஆண்டில் கனடா அணியில் இடம் பிடித்தார். தற்போது, அந்த அணியின் அணித்தலைவராக உயர்ந்துள்ளார்.
அடுத்தபடியாக அமெரிக்க அணியில் 9 இந்திய வம்சாவளியினர் இடம் பிடித்துள்ளனர். அமெரிக்க அணியின் அணித்தலைவர் மோனங்க் படேல் இந்தியாவின் குஜராரத்தில் பிறந்தவர் ஆவார்.
குஜராத்தின் U19 அணியில் ஜஸ்பிரீத் பும்ராவுடன் இணைந்து மோனங்க் படேல் விளையாடியுள்ளார்.
அடுத்தப்படியாக ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணியில் தலா 7 இந்திய வம்சாவளியினர் இடம் பிடித்துள்ளனர்.
இதில், ஓமன் அணித்தலைவர் ஜதிந்தர் சிங் இந்தியாவின் பஞ்சாபில் பிறந்தவர் ஆவார். 2003 ஆம் ஆண்டு ஓமனுக்கு இடம் பெயர்ந்த அவர், 2015 ஆம் ஆண்டில் ஓமன் அணியில் இடம் பிடித்தார்.
மேலும், நியூசிலாந்து அணியில் 2 பேரும், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய அணிகளில் தலா ஒரு இந்திய வம்சாவளியினர் இடம் பிடித்துள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire