கணவாய் கிரேவி.
7 மாசி 2026 சனி 15:46 | பார்வைகள் : 2476
சண்டே அன்னைக்கு காரசாரமா எதுவது சமைக்கனும்னு தோனுதா... அதுவும் கணவாய் வச்சு சமைக்கனும்னு இருக்கீங்களா, அப்போ கண்வாய் கிரேவில கொஞ்சம் காரசாரமா டேஸ்ட்ல செட்டிநாடு ஸ்டைலுல கணவாய் கிரேவி சமைச்சு பாருங்க.
இந்த செட்டிநாடு கிரேவி செஞ்சு சப்பாத்தி, புரோட்டா, தோசை, இட்லி என அனைத்திற்கும் வைத்து சாப்பிட்டலாம் டேஸ்ட்டும் சும்மா நச்சுன்னு இருக்கும்.
தேவையான பொருட்கள்: கணவாய், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, கடுகு, சோம்பு, உப்பு, கரம் மசாலா, தனியா, எண்ணெய், இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை, கொத்தமல்லி.
செய்முறை : கணவாய் எடுத்து சுத்தம் செய்து, தோலை நீக்கி, சிறிது சிறிதான அளவில் நறுக்கி வைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் 10 தோல் நீக்கிய சின்னவெங்காயம், 4 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம், மிளகு சோம்பு, ஒன்றரை டீஸ்பூன் அளவிற்கு தனியா சேர்த்து தூளாக அரைத்துக் கொள்ளவும்.
பின் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த உடன் கடுகு சேர்த்து 15 சின்ன வெங்காயம் பொடியாய் நறுக்கி சேர்த்துக் கொண்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். கருவேப்பிலை, ஒன்றரை டீஸ்பூன் அளவிற்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
இதன்பின் அரைத்து வைத்த மசாலா, உப்பு மற்றும் கால் டீஸ்பூன் அளவிற்கு கரம் மசாலாவை சேர்த்துக் கொண்டு நன்றாக கிளரி விடவும். இதன்பின் கணவாயை சேர்த்து 15 நிமிடம் வரை நன்றாக வே விடவும். அடி பிடிக்காமல் இருக்க அப்போ அப்போ சற்று கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்த பின் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து எடுத்தால் டேஸ்ட்டான பார்க்கும்போது நாக்குல எச்சி ஊறுர மாதிரி டேஸ்ட்ல செட்டிநாடு கணவாய் கிரேவி சமைச்சுறலாம். ரெடி ஆகிரும்... அப்பறம் என்ன ஒரு வெட்டு வெட்டுங்க..!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire