ஜனநாயகன் திரைப்படம் வெளியாகிறதா?
7 மாசி 2026 சனி 15:49 | பார்வைகள் : 2653
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிட்டார்கள்.. ஆனால் படம் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதால் படத்தின் ரிலீஸ் முடங்கியது.
படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும், ஏனெனில் ஒரு அதிகாரி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் என சென்சார் போர்ட் சொல்ல அதை ஏற்காத தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. ஆனால் ஒரு மாதம் ஆகியும் இந்த வழக்கில் இதுவரை தயாரிப்பாளருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை..
தற்போது இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. ஆனால் இந்த வழக்கை தயாரிப்பாளர் ஏற்கனவே வாபஸ் வாங்கி விட்டதாகவும், மறுதணிக்கைக்கு விண்ணப்பித்து விட்டதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறது.
படம் மறு தணிக்கைக்கு சென்று விட்டால் கண்டிப்பாக இன்னும் சில நாட்களில் சான்றிதழை கொடுத்து விடுவார்கள்.. எனவே வருகிற 19 அல்லது 20ம் தேதி ஜனநாயகன் படம் வெளியாகும் என சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.இந்த செய்தி விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறது...
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire