உலகத்துடன் இந்தியாவை இணைப்பது தமிழ்தான் ! பிரதமர் மோடி
8 மாசி 2026 ஞாயிறு 05:33 | பார்வைகள் : 1974
பிரதமர் மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக மலேசியா சென்றுள்ளார். கோலாலம்பூர் சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு நேரில் சென்று மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் வரவேற்றார்.
இதையடுத்து, கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியும், அன்வர் இப்ராஹிமினும் சென்றனர்.
அங்கு பிரதமர் மோடிக்கும், அன்வர் இப்ராஹிமினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசியா வாழ் இந்தியர்கள் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,மலேசியாவின் பிரதமர் ஆவதற்குமுன்பு இருந்தே அன்வர் இப்ராஹிம் எனது நண்பர். 2026ம் ஆண்டு எனது முதல் வெளிநாட்டு பயணமாக மலேசியா வந்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
மலாய் மொழிக்கும் இந்திய மொழிக்கும் இடையே நிறைய தொடர்பு உள்ளது. உலகில் இந்திய வம்சாவளியினர் அதிக அளவில் உள்ள 2வது நாடு மலேசியா. இந்தியர்களுக்கும், மலேசியர்களுக்கும் இடையே நிறைய தொடர்பு உள்ளது.
உலகத்துடன் இந்தியாவை இணைப்பது தமிழ்தான். தமிழ் இலக்கியம் முடிவில்லாதது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது.
துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை முறை விரைவில் மலேசியாவில் அமலாகும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றமடைந்துள்ளது. 11வது பொருளாதாரத்தில் இருந்து தற்போது 3வது இடத்திற்கு முன்னேற உள்ளதுஎன்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire