அமைச்சர்களால் தேர்தலை சந்திப்பதில் திமுகவுக்கு பதற்றம்; நிர்மலா சீதாராமன்
8 மாசி 2026 ஞாயிறு 11:53 | பார்வைகள் : 2028
திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளால் திமுக பதற்றத்துடன் தேர்தலை சந்திக்க இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது; இந்தியா மிக வேகமான முறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறமையாளர்களை உருவாக்கி வருகிறது. அண்மை காலமாக நிலவும் முதலீட்டு மாற்றங்களுக்கு மத்தியில் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பெரிய அளவில் இல்லை என்ற வாதமே தவறானது. அது ஒரு சில நிதி மேலாளர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் தேவைக்கேற்ப ஏஐ மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
இந்தியாவின் பலமே மனித வளம்தான். கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் இருந்தே இளைஞர்களுக்கு ஏஐ தொடர்பான பயிற்சியும் வழங்கப்படுகிறது. சீனாவைத் தவிர, இந்தியாவைப் போன்று வேறு எந்த நாடுகளும் மனித வளத்தை ஏஐத்துறைக்காக ஈடுபடுத்துவதில்லை.
தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் திமுகவிற்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான போட்டியை கொடுக்கும். எங்களின் கூட்டணி வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறது. ஆளும் திமுக வழக்கமான முறையில் இந்த தேர்தலை சந்திக்க முடியாது. கடந்த ஓராண்டில் அமைச்சர்களின் செயல்பாடுகளால் முதல்வர் ஸ்டாலின் பதற்றத்துடன் இந்தத் தேர்தல் சந்திக்கிறார், இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire