தே.ஜ., கூட்டணி முக்கிய தலைவர்கள் தேர்தலில் களமிறங்க அமித்ஷா கட்டளை
8 மாசி 2026 ஞாயிறு 13:07 | பார்வைகள் : 1873
தேசிய ஜனநாயக கூட்டணியில், முக்கிய தலைவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக, கடந்த 2025 ஏப்ரல் 11ம் தேதி, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தது.
அதை தொடர்ந்து, தே.ஜ., கூட்டணியில் பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன; தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளை சேர்க்க, பேச்சு நடந்து வருகிறது.
தே.ஜ., கூட்டணியில் அ.ம.மு.க., இணைந்தாலும், அக்கட்சியின் பொதுச்செயலர் தினகரன் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' என அறிவித்துள்ளார். அதுபோல, பா.ஜ.,வில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும், தேர்தலில் போட்டியிட விரும்பாமல், ஆறு தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகி இருக்கிறார்.
இந்நிலையில், 'சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரும் போட்டியிட வேண்டும். அப்போது தான், தே.ஜ., கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். 'முக்கிய தலைவர்கள் போட்டியிடாமல் ஒதுங்கினால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2009 லோக்சபா தேர்தலில், இரண்டாவது முறையாக பா.ஜ., தோற்றது. அதன்பின், நிதின் கட்கரி தலைவரானதும், 'இனி வரும் சட்டசபை, லோக்சபா தேர்தல்களில், முக்கிய தலைவர்கள் அனைவரும் போட்டியிட வேண்டும்' என முடிவெடுக்கப் பட்டது.
அதை தொடர்ந்தே, 2014 லோக்சபா தேர்தலில், அருண் ஜெட்லி போன்ற முக்கிய தலைவர்கள் போட்டியிட்டனர். சமீபத்தில், பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் டில்லியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், இதை நினைவுபடுத்தி பேசியுள்ளனர்.
வரும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலிலும், முக்கிய தலைவர்களை களமிறக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் கண்டிப்பாக களமிறங்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire