Paristamil Navigation Paristamil advert login

எப்ஸ்டீனை ஒருநாளும் சந்தித்ததில்லை - தலாய் லாமா விளக்கம்

 எப்ஸ்டீனை ஒருநாளும் சந்தித்ததில்லை - தலாய் லாமா விளக்கம்

8 மாசி 2026 ஞாயிறு 10:06 | பார்வைகள் : 1803


எப்ஸ்டீன் கோப்புகளில் தனது பெயர் இருப்பது குறித்து திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்கள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

அதில் இடம்பெற்றுள்ள தலைவர்கள், பிரபலங்களின் பெயர்கள் பல்வேறு கேள்விகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் 169 முறை இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து தலாய் லாமா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் தலாய் லாமாவின் பெயரை தொடர்புப்படுத்தி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனை ஒருநாளும் தலாய் லாமா சந்தித்ததில்லை என்று கூறப்பட்டுள்ளது.