பிரதமர் மோடியின் பயணம் மலேசியா- இந்தியா உறவுகளை வலுப்படுத்தும்; மத்திய அரசு
9 மாசி 2026 திங்கள் 07:10 | பார்வைகள் : 1849
மலேசியா பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்த பயணம் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மலேசியாவுக்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றிருந்தார். அங்கு நாட்டு பிரதமர் அன்வார் இப்ராஹிமை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அங்கிருந்து இந்தியாவுக்கு பிரதமர் மோடி திரும்பினார்.
இந்தப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மறக்கமுடியாத ஒரு பயணம் நிறைவடைகிறது.
நமது நெருங்கிய கலாசசார உறவுகளை கொண்டுள்ள மலேசியாவிற்கு வெற்றிகரமான பயணத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி இந்தியாவுக்குப் புறப்பட்டார். இந்தப் பயணம் இந்தியா-மலேசியா இடையே உள்ள உறவுகளை வலுப்படுத்தும். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire