டிஜிட்டல் கைது சம்பவங்களை தடுக்க விதிமுறை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
10 மாசி 2026 செவ்வாய் 09:14 | பார்வைகள் : 1828
ரூ.54 ஆயிரம் கோடி அளவுக்கு டிஜிட்டல் கைது மூலம் மோசடி நடந்தது என்பது திருட்டு அல்லது கொள்ளை சம்பவம் எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், அதனை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்களில் பொது மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இதனை தடுப்பது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி சூர்யகாந்த் , நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி, என்வி அஞ்சாரியா அமர்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறிதாவது: டிஜிட்டல் மோசடியில் இழந்த பணம் என்பது பல சிறிய மாநிலங்களின் பட்ஜெட்டை விட அதிகம். இது வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பு அல்லது பறக்கணிப்பு காரணமாக நடக்கலாம். மோசடியை தடுக்க ஆர்பிஐ மற்றும் வங்கிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகளை எடுக்க துவங்கி உள்ளது.
சைபர் மோசடியில் இருந்து தப்புவதற்கு டெபிட் கார்டுகளை தற்காலிகமாக முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை வங்கிகள் எடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளையும், தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் உருவாக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் ஆய்வு செய்வதுடன், அடுத்த நான்கு வாரத்துக்குள் மத்திய உள்துறை அமைச்சகமானது, இந்த குற்றங்களை தடுப்பதற்கு வரைவு விதிமுறைகைள வகுக்க வேண்டும்.
இதுபோன்ற குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு சிபிஐக்கு குஜராத் மற்றும்டில்லி அரசு அனுமதி வழங்க வேண்டும். டிஜிட்டல் கைது குற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி, தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire