வெளிநாட்டில் தாய் செய்த செயல் - இலங்கையில் 5 வயது மகளை அடித்து சித்திரவதை செய்த தந்தை
10 மாசி 2026 செவ்வாய் 16:29 | பார்வைகள் : 2334
கொழும்பு, முகத்துவாரம், ரந்திய உயன பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் தனது 5 வயது மகளை அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படும் தந்தை ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தந்தை ஒருவர் தனது மகளை அடித்து சித்திரவதை செய்யும் காணொளி ஒன்று அண்மை காலமாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரான 34 வயதுடைய தந்தை தொடர்மாடி குடியிருப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தந்தையை கைதுசெய்ய பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த தந்தையின் தாயும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
5 வயது மகளின் தாய் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் குடும்பத் தகராறு காரணமாக தாயை பழிவாங்குவதற்காக சந்தேக நபரான தந்தை தனது மகளை அடித்து சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட தந்தை போதைப்பொருளுக்கு அடிமையானர் என வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire