Paristamil Navigation Paristamil advert login

உதவி கேட்ட விஜய்; அறிவுரை சொன்ன ஜெகன்

உதவி கேட்ட விஜய்; அறிவுரை சொன்ன ஜெகன்

11 மாசி 2026 புதன் 05:36 | பார்வைகள் : 1898


ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரர் சுனில் ரெட்டி மகன் திருமணம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்றது, அரசியலாகி இருக்கிறது.  

இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது: அரசியலில் ஜெகனை தன் 'ரோல் மாடல்' ஆக வைத்திருக்கிறார் விஜய். ஜெகனை போலதான், மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார். அவரை போல வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் அணிகிறார்.  

எல்லாவற்றுக்கும் மேலாக, ஜெகனுக்கும் விஜய்க்கும் இடையே, மத ரீதியான ஒற்றுமையும் உள்ளது. இருவருக்கும் தேசிய அளவில் உறவுகள் இல்லாததால், புது கூட்டணியை உருவாக்க நினைக்கின்றனர்.  

இதுபற்றி, இருவரும் அடிக்கடி பேசிக் கொள்கின்றனர். அதற்கு முன்னோட்டமாக, சில விஷயங்கள் திருமண நிகழ்ச்சியில் நடந்த சந்திப்பில் பகிரப்பட்டுள்ளன.

சென்னை உள்ளிட்ட ஆந்திர எல்லை பகுதிகளிலும், மத்திய மாவட்டங்களிலும் ரெட்டி சமூக ஓட்டுகளும், கிறிஸ்துவ, தெலுங்கு ஓட்டுக்களும் உள்ளன.  

அந்த ஓட்டுகள், தற்போது தி.மு.க., வசமிருக்கின்றன. அவற்றை தன் பக்கம் கொண்டு வர உதவுமாறும், ஜெகனுக்கு இருக்கும் டில்லி உயர்மட்ட தொடர்பை தனக்கு ஆதரவாக செயல்பட சொல்லுமாறும், விஜய் கேட்டுள்ளார்.  

அதேபோல, 'உங்களுக்கு எதிரி, தி.மு.க.,தான் என்றால், அவர்கள் குறித்து மட்டும் மேடைகளில் பேசுங்கள். தேவையில்லாமல், டில்லியை பகைத்துக் கொள்ள வேண்டாம் என ஜெகன் அறிவுரை கூறியிருக்கிறார். இவ்வாறு கூறினர்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3