Paristamil Navigation Paristamil advert login

விவசாயிகள் நலனை விற்ற காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

விவசாயிகள் நலனை விற்ற காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

12 மாசி 2026 வியாழன் 06:17 | பார்வைகள் : 1670


காங்கிரஸ் எம்பி ராகுல், மத்திய பட்ஜெட்டை படிக்காமல் வந்துபேசி உள்ளார். ஏழைகள், விவசாயிகள் நலனை விற்றதே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான்,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

லோக்சபாவில், மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பட்ஜெட்டை படிக்காமல் லோக்சபாவில் வந்து ராகுல் பேசி உள்ளார். ஏஐ மற்றும் டேட்டா குறித்து கவலை தெரிவித்துள்ளார். இந்தியர்களின் தகவல்கள் வெளிநாடுகளுக்கு செல்வதாக கூறியுள்ளார். இது தவறு.

உணவு பாதுகாப்பு குறித்தும் அவர் பேசி உள்ளார். உணவு மானியத்துக்கு 2.27 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது. உணவு பதப்படுத்துதல் துறையில் தொழிற்சாலைகள் அமைக்க 4,064 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

எதிர்பாராத எந்த சவாலையும் சமாளிப்பதற்காக பொருளாதார ஸ்திரத்தன்மை நிதியாக 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முக்கிய தனிமங்களின் தன்னிறைவு பெற 9,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நாட்டை விற்றவர்கள் யார்? உலக வர்த்தக அமைப்புடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் ஒப்பந்தம் போட்டது.  இதனால்,ஏழைகளுக்கு உணவு மானியம் அளிக்க முடியாமலும், விவசாயிகளிடம் பயிர்களை கொள்முதல் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

மத்தியில் பிரதமர் மோடி  தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு தான்,  இந்த விவகாரத்தை உலக வர்த்தக மையத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிவாரணம் பெற்றுத் தந்தது.மோடி அரசின் தலையீடு காரணமாக தான், உணவு  பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதுடன், ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.  கோவிட் காலத்தில்,  ஏழைகளுக்கு உதவி செய்தது.  அவர்கள் தான் ஏழைகள், விவசாயிகளின்  நலனை விற்றனர். ஏழை விவசாயிகளை விற்றனர்.  இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3