திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
18 பங்குனி 2026 புதன் 15:41 | பார்வைகள் : 1665
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. கடும் இழுபறிக்கு பின், காங்கிரஸ் கட்சிக்கு, 28 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தங்களுக்கும் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, அடம் பிடித்து வந்தன. தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று இந்திய கம்யூனிஸ்ட்- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு தொகுதி குறைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 2 தொகுதிகளில் அதிமுக கூட்டணியிடம் தோல்வி அடைந்தது. இப்போது தேர்தல் நடப்பதற்கு முன்னதாகவே திமுகவிடம் ஒரு தொகுதியை பறிகொடுத்துள்ளது.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள், 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகம், குறைப்பு பற்றிய விவரம்;
* காங்கிரஸ் -28 தொகுதி (3 அதிகம்)
* முஸ்லிம் லீக் -2 தொகுதி (1 குறைப்பு)
* ம.ம.க., -2 தொகுதி (அதே நிலை)
* ம.தி.மு.க., -4 தொகுதி (2 குறைப்பு)
* கொமதேக - 2 தொகுதி (1 குறைப்பு)
* இந்திய கம்யூனிஸ்ட்- 5 தொகுதிகள் (1 குறைப்பு)
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire