கலாசார சுற்றுப்பயணத்தில் தப்பிய கைதி –செனெகலில் வைத்து மீண்டும் கைது!!
18 பங்குனி 2026 புதன் 07:45 | பார்வைகள் : 3281
காவலில் இருந்த கைதி ஒருவர் கலாசார சுற்றுப்பயணத்தின் போது தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமை பொதுப் போக்குவரத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் இருந்தபோது, குறித்த நபர் திடீரென அவர்களிடமிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
இந்நிலையில், அவர் செனெகலுக்கு தப்பிச் சென்ற போது அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தேவையான நடைமுறைகள் நிறைவடைந்த பின், அவர் விரைவில் பிரெஞ்சு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த கைதி RER A தொடருந்து Auber நிலையத்தில் நின்றபோது தப்பிச் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லூவர் அருங்காட்சியகத்திற்கு மேற்கொள்ளப்பட்ட கலாசார விஜயத்தின் போது, Nanterre சிறைச்சாலையைச் சேர்ந்த இக்கைதி தப்பியோடியிருந்தார்.
மதியம் சுமார் 2.30 மணியளவில், குறித்த நபர் தொடருந்திலிருந்து இறங்கி மெட்ரோ 7 ஐ நோக்கி வேகமாக ஓடியுள்ளார். அவரை தடுத்து நிறுத்த காவல்துறை அதிகாரிகள் முயன்ற போதிலும், அவரால் தப்பிச் செல்ல முடிந்தது. மூன்று கைதிகள் கொண்ட குழுவில் இவர் ஒருவராக இருந்து, ஆறு சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
2001ஆம் ஆண்டு பிறந்த இந்நபர், வீடுகளில் உடைத்து திருடுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டிருந்தார். அவர் 2028ஆம் ஆண்டு வரை சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Nanterre நீதித்துறை இந்த தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், Hauts-de-Seine காவல்துறை வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire