பெட்ரோல், டீசல் கார்களை கொடுத்து Vinfast EV வாங்குவோருக்கு கூடுதல் தள்ளுபடி
18 பங்குனி 2026 புதன் 14:23 | பார்வைகள் : 2033
வியட்நாமைச் சேர்ந்த EV நிறுவனமான Vinfast, புதிய ‘Trade Gas for Electric’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களை வாகனங்களை கொடுத்து மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், கார்கள் வாங்குபவர்களுக்கு 3 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி, ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு 5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
ஆனால் ஸ்கூட்டர் தள்ளுபடி இந்தியாவில் பொருந்தாது, ஏனெனில் Vinfast இந்தியாவில் இன்னும் தனது இரு சக்கர வாகன பிரிவை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை.
Vinfast தற்போது இந்தியாவில் VF 6 மற்றும் VF 7 எனும் இரண்டு மின்சார SUV-களை விற்பனை செய்கிறது.
VF 6: 210bhp/310Nm PMS மோட்டார், 59.6kWh பேட்டரி, 468 கி.மீ. range.
VF 7: 348.4bhp/510Nm மோட்டார், 70kWh பேட்டரி.
இவை இரண்டும் BNCAP 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்றுள்ளன. VF 6 ரூ.20 லட்சத்திற்குள், VF 7 ரூ.30 லட்சத்திற்குள் விலைப்பட்டியலில் உள்ளது.
மேலும், VF 3 (MG Comet போட்டியாளர்) மற்றும் Limo Green (Kia Carens Clavis EV போட்டியாளர்) போன்ற புதிய மொடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளன.
Vinfast, இந்தியாவில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்து, தூத்துக்குடியில் வருடத்திற்கு 1,50,000 யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட தொழிற்சாலையை அமைத்துள்ளது.
இந்த திட்டம், எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் என Vinfast தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire