Paristamil Navigation Paristamil advert login

மேற்காசியாவில் தற்போதைய நிலவரம்: குவைத் இளவரசருடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேச்சு

மேற்காசியாவில் தற்போதைய நிலவரம்: குவைத் இளவரசருடன் தொலைபேசியில் பிரதமர் மோடி பேச்சு

19 பங்குனி 2026 வியாழன் 08:46 | பார்வைகள் : 1582


குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-காலேத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ​​மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் பாதுகாப்புச் சூழல் குறித்து, இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்துள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: குவைத்தின் பட்டத்து இளவரசர்  ஷேக் சபா அல்-காலேத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபா உடன் தொலைபேசியில் உரையாடி, வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழல் குறித்து நாங்கள் விவாதித்தோம். சமீபத்திய நிகழ்வுகள் குறித்த கருத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டோம்.

குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதை மீண்டும் வலியுறுத்தினோம். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வது எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.

பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ச்சியான ராஜதந்திர ஈடுபாடு இன்றியமையாதது என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கான அவரது தொடர்ச்சியான ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்தேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2