Paristamil Navigation Paristamil advert login

ஐக்கிய அரபு அமீரக விமானப்படைத் தளத்தின் மீது ஈரானின் அதிரடி தாக்குதல்!

ஐக்கிய அரபு அமீரக விமானப்படைத் தளத்தின் மீது ஈரானின் அதிரடி தாக்குதல்!

19 பங்குனி 2026 வியாழன் 13:31 | பார்வைகள் : 1926


மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா தளங்களை அழிக்கும் நோக்கத்தில் ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்த தாக்குதல்களானது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கவுக்கு பாரிய அழுத்ததை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அல் மின்ஹாத் (Al Minhad) விமானப்படைத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

அங்கிருந்த பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலியப் படையினருக்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துப் பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தமது தரப்பில் எவ்வித உயிர்ச்சேதமோ அல்லது சொத்துச் சேதமோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலால் அவுஸ்திரேலியப் படைகளுக்குச் சொந்தமான சில சொத்துகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தளத்திலுள்ள பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் சேத விவரங்கள் குறித்த மேலதிக தகவல்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.