ஆர்.எஸ்.எஸ்., நிர்வாக அமைப்பில் மாற்றம்: மாநிலங்களை நீக்கி 80 கோட்டங்கள் உருவாக்கம்
20 பங்குனி 2026 வெள்ளி 07:27 | பார்வைகள் : 1552
ஆர்.எஸ்.எஸ்., நிர்வாக அமைப்பில் மாநிலங்கள் நீக்கப்பட்டு, ஒட்டுமொத்த இந்தியாவும், 80 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.எஸ்.,சில் தாலுகா, மாவட்டம், விபாக், மாநிலம், ஷேத்ரம் என, நிர்வாக அடுக்குகள் உள்ளன. பெரிய மாநிலங்களை, இரண்டு முதல் ஆறு மாநிலங்களாக, ஆர்.எஸ்.எஸ்., பிரித்துள்ளது.
தமிழகம் இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 45 மாநிலங்கள் உள்ளன. ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டு, 100 ஆண்டுகளாகும் நிலையில், அதன் நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதை, கடந்த 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை, ஹரியானாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பொதுக்குழுவில், அதன் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே அறிவித்தார். அதன்படி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாக அமைப்பில், இனி மாநிலங்கள் இருக்காது.
அதற்கு பதிலாக, ஒட்டுமொத்த நாடும், 80 சம்பாக், அதாவது கோட்டங்களாக பிரிக்கப்படும். நான்கு முதல் ஆறு கோட்டங்கள், பிரதேசம் என அழைக்கப்படும். ஏற்கனவே உள்ள விபாக், ஷேத்ரம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பொதுக்குழுவில் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே பேசியது:
ஆர்.எஸ்.எஸ்.,சின் அமைப்பு பணிகளை நாடு முழுதும் விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பணிகளை விரிவுபடுத்த வேண்டுமானால், அமைப்பின் அலகுகள் சிறியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் சுற்றுப்பயணம் எளிதாக இருக்கும்.
அனைத்து பகுதிகளிலும் கவனம் செலுத்த முடியும். இந்த நோக்கத்தில் ஆலோசித்து, புதிய முயற்சியாக, இப்போதுள்ள மாநிலங்களுக்கு பதிலாக, கோட்டங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டமைப்பு, நுாற்றாண்டு விழா முடிந்ததும் நடைமுறைக்கு வரும். அதுவரை இப்போதுள்ள நிலையே தொடரும். இந்த மாற்றங்களால், 80க்கும் அதிகமான கோட்டங்கள் உருவாகும். அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கு, புதிதாக உருவாக்கப்படும் கோட்டங்களின் நிர்வாகக் குழுக்கள் மட்டுமே அழைக்கப்படுவர். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய மாற்றங்களின்படி, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாக அமைப்பில், தமிழகம், ஆறு கோட்டங்களாக பிரிக்கப்பட உள்ளது. மாநில தலைவர், மாநிலச் செயலர், மாநில அமைப்பாளர் போன்ற பொறுப்புகள், கோட்டத் தலைவர், செயலர், அமைப்பாளர் என்று மாறும் என, அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire