மணிரத்னம் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!
21 பங்குனி 2026 சனி 15:49 | பார்வைகள் : 1981
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்க உள்ள அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் 23வது படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், இந்தியா டாக்கீஸ் நிறுவனமும் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர். விஜய் சேதுபதி, சாய் பல்லவி நாயகன் நாயகியாக நடிக்க ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படம் பற்றி கடந்த சில நாட்களாக பல்வேறு பொய்யான செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஏஆர் ரஹ்மான் இப்படத்தில் பணியாற்றவில்லை. அவருக்குப் பதிலாக சாய் அபயங்கர் இசையமைக்கப் போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.
இப்படியான பொய்யான தகவல்களை வாயடைக்க வைப்பதற்காக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire