Isère பகுதியில் 700 லிட்டர் எரிபொருள் திருடப்பட்டு Snapchat மூலம் விற்பனை!!
21 பங்குனி 2026 சனி 15:50 | பார்வைகள் : 2799
எரிவாயு மற்றும் பெட்ரோல் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் திருட்டுகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. இஸேர் (Isère) பகுதியிலுள்ள Bourgoin-Jallieu நகரில், சுமார் 700 லிட்டர் எரிபொருள் திருடப்பட்டு, Snapchat மூலம் ஒரு லிட்டருக்கு ஒரு யூரோவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் விவசாய மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளன.
மார்ச் 16 அன்று பணிக்கு வந்த ஒரு லொரி ஓட்டுநர், தனது டேங்க் மூடி மாற்றமாக இருப்பதை கவனித்தார். பின்னர் அவர் சரிபார்த்தபோது, குறைந்தது 200 லிட்டர் எரிபொருள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. முந்தின நாள் டேங்க் நிரப்பப்பட்டிருந்ததால், உடனே மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இரவில் விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதிலும், திருடர்கள் கம்பி வேலியை வளைத்து உள்ளே நுழைந்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் டப்பாக்களுடன் எரிபொருளை எடுத்துச் சென்றுள்ளனர். சமீபத்தில், இந்த பகுதியில் பல நிறுவனங்களின் வாகனங்களும் இதேபோன்று பாதிக்கப்பட்டுள்ளன.
இறுதியில், காவல்துறையினர் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர். அவர்கள் Snapchat மூலம் குறைந்த விலையில் டீசலை விற்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்துகின்றனர். எரிபொருள் திருட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 45,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire