திமுக கூட்டணியில் சொற்ப சீட்களே கிடைக்கும் என திருமா சூசகம்
22 பங்குனி 2026 ஞாயிறு 09:02 | பார்வைகள் : 1583
தி.மு.க., கூட்டணியில் சொற்ப எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கும் என திருமாவளவன் சூசகமாக தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, கஞ்சா, மது, குட்கா நடமாட்டம் அதிகரிப்பு போன்ற கடும் நெருக்கடிகளை எதிர்த்து பேச முடியாமல் தி.மு.க., கூட்டணியில் வி.சி., தொடர்ந்து பயணித்து வருகிறது. பா.ஜ.,வுக்கு எதிரான தி.மு.க.,வின் நிலைப்பாடு மட்டுமே, தி.மு.க.,வுடனான தொடர் பயணத்திற்கு காரணம் என திருமாவளவன் கூறி வருகிறார்.
இந்நிலையில், இந்த தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என அக்கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். திடீரென கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.,வுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தரப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், பல ஆண்டுகளாக பயணித்து வரும் வி.சி.,க., க்கு இரட்டை இலக்கதொகுதிகளை கேட்டுப் பெற வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வழக்கம்போல நேற்றிரவு பேஸ்புக் நேரலையில் திருமாவளவன் பேசினார். அப்போது, இன்று (21ம் தேதி) முதல், வரும் 24ம் தேதி வரை வி.சி.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், 38 மாவட்டங்களுக்கும், 4 நாட்களில் விருப்பமனு பெறப்படுகிறது.விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய். விருப்பமனுவுடன் 5, ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதில், 5 ஆயிரம் ரூபாய் டி.டி., எடுத்து வர வேண்டும்.
அப்போதுதான், தேர்தல் செலவு கணக்குகளை எளிதில் கையாள முடியும். டி.டி., எடுக்க இயலாதோர் ரொக்கமாக வழங்கலாம். தி.மு.க., கூட்டணியில், 23 கட்சிகள் இருப்பதால், சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே தொகுதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், நீண்டகாலமாக உழைத்து வருவோர், நம்பிக்கையான நபர்களை தேர்வு செய்து சீட் வழங்குவோம்.
ஆனால், கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கூடுதல் தொகுதிகளை தி.மு.க.,விடம் கேட்டு பெற வேண்டும் என தொண்டர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர் என தனது நிலையை விளக்கி, 1 மணி நேரத்திற்கு மேலாக நேரலையில் பேசினார்.
இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்காவிட்டால், கூட்டணியில் இருந்து வி.சி., விலகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சொற்ப தொகுதிகள் கிடைத்தாலும் தி.மு.க., கூட்டணியை விட்டு விலக மாட்டோம் என திருமா சூசகமாக தெரிவித்து விட்டதாகவே, அக்கட்சியினர் தங்களுக்குள் புலம்பி வருகின்றனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire