நீண்ட காலம் பதவி வகித்த தலைவர்; பிரதமர் மோடிக்கு குவியும் பாராட்டுகள்
23 பங்குனி 2026 திங்கள் 10:18 | பார்வைகள் : 1397
இந்திய அரசாங்கத்தில் நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் என்ற புதிய சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். அவரின் இந்த சாதனைக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல்கட்சிகள் தலைவர்கள், சமூக அமைப்பினர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, குஜராத்தில் முதல்வராக 2001ல் பதவி ஏற்றார். அதன் பின்னர், 2014ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 3வது முறையாக நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இதன் மூலம் அரசாங்கத்தில் அவர் 8931 நாட்கள் வரையில் நீண்ட காலம் தலைவராக பதவி வகித்தவர் என்ற புதிய சாதனையை படைத்து இருக்கிறார்.
இதற்கு முன்னர் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங் நீண்ட நாட்கள் அரசாங்க பதவி வகித்த தலைவராக இருந்தார். அவர் மொத்தம் 8930 நாட்கள் அரசு பதவியில் இருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த சாதனையை ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் தமது எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது; பிரதமர் மோடி, தற்போது இந்தியாவில் மிக நீண்ட காலம் அரசு தலைவராக பணியாற்றியவர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். நாடு மற்றும் மக்களின் மீது அவர் கொண்டுள்ள தூய்மையான அர்ப்பணிப்பையே இது காட்டுகிறது. குஜராத் முதல்வராக இருந்த காலம்தொட்டே அவரின் தன்னிகரில்லாத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புமிக்க தலைமை, பிரதமர் மோடி வாழ்க்கையில் இடைவிடாத சேவையை அளிக்கும் பயணமாக அமைந்துள்ளது.
சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங் படைத்திருந்த 8930 நாட்கள் என்ற சாதனையை முறியடித்து, வரலாற்றில் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியிருக்கிறார். அரசு பதவியில் 8931 நாட்கள் என்ற இத்தருணம், நாடே தமக்கு முதன்மை என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு அரசு நிர்வாகம், செயலில் நேர்மை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆற்றும் அயராத சேவை ஆகியவை மீதான அவரின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை எதிரொலிக்கிறது.இந்த சிறந்த சாதனையை படைத்த பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.இவ்வாறு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire