சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: போலீசார் 9 பேரும் குற்றவாளிகள்
24 பங்குனி 2026 செவ்வாய் 07:21 | பார்வைகள் : 1642
தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு அளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கு, சிபிசிஐடி விசாரணையில் இருந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், பாலகிருஷ்ணன்,ரகு கணேஷ்,முருகன், சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை,தாமஸ் பிரான்சிஸ், முத்து உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிபிஐ தரப்பில் 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 400 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்சின் விசாரணை நடைபெற்றது. சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் தமது தரப்பு வாதத்தை கோர்ட்டில் முன் வைத்தார். அதேபோல குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இருந்தும் வாதங்கள் மூன வைக்கப்பட்டன.
அனைத்துத் தரப்பு விசாரணைகள், வாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் இன்று (மார்ச் 23) அளித்த தீர்ப்பில் ,' தந்தை, மகன் இருவரின் மரணமும் என்பது கொலை என தீ்மானிக்கப்படுகிறது எனக்கூறி, போலீசார் 9 பேரும் குற்றவாளிகள். அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.
நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளதாவது: தந்தை, மகன் இருவருக்கும் உடலில் போலீசாரால் தான் காயம் ஏற்பட்டது என்பது ஊர்ஜிதம் ஆகி உள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் தாக்கியதால் தான் உயிரிழந்தனர். இருவர் மீதான தாக்குதல் கொலை என தீர்மானிக்கப்படுகிறது. ஸ்ரீதர் கூறியதால் தான் போலீசார் தந்தை, மகனை தாக்கினர். கொலை தான் என்பது தடயவியல் சோதனை உறுதி செய்துள்ளது. காயமடைந்த இருவரையும் தனியார் வாகனத்தில் ஏற்றி சிறைச்சாலைக்கு கொண்டு சென்றது ஏன்?
ஸ்ரீதர் கூறியதாலேயே தாக்கி உள்ளனர். 9 பேருக்கும் எதுபோன்ற தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களின் உடல்நிலை, சம்பளம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire