தயாரிப்பாளராக மாறி அஜித்குமார்!.
23 பங்குனி 2026 திங்கள் 15:42 | பார்வைகள் : 1838
கோலிவுட் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் அஜித்குமார். அமராவதி திரைப்படம் சினிமாவில் நடிக்க தொடங்கி அதன்பின் பல பல வருடங்களாக பல படங்களில் நடித்து விட்டார். சினிமாவுக்கு வந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. விஜய்க்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக அஜித் இருக்கிறார். கடந்த பல வருடங்களாகவே விஜயின் போட்டி நடிகராக வலம் வந்தவர் அஜித்..
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தின் முடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அஜித் 185 கோடி சம்பளம் கேட்டதால் இதுவரை தயாரிப்பாளர் உறுதி செய்யப்படவில்லை..
இந்நிலையில்தான் அஜித் ஒரு புதிய தயாரிப்பு பண்ணு நிறுவனத்தை துவங்கியிருக்கிறார். எனவே அஜித் அடுத்து நடிக்கப் போகும் புதிய படத்தில் அவரே சொந்தமாக தயாரிக்கிறாரா என்கிற கேள்வி அஜித் ரசிகர் மனதில் இருந்திருக்கிறது., ஆனால் இது அதற்காக இல்லை. ஏ.எல் விஜய் இயக்கத்தில் அஜித் கார் ரேஸ் தொடர்பான ஒரு டாக்குமென்டரி படத்தில் நடித்து வருகிறார
அஜித்தின் கார் ரேஸ் நடக்கும் இடங்களில் நடக்கும் சம்பவங்களை அப்படியே படம் பிடித்து வருகிறார்கள். இந்த டாக்குமெண்டரி விரைவில் வெளியாகவிருக்கிறது.இந்தப் படத்தை வெளியிடுவதற்காக Ajith Sports Services என்கிற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை அஜித் துவங்கியிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire