இந்தியாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி: ஈரான் உருக்கம்
24 பங்குனி 2026 செவ்வாய் 09:42 | பார்வைகள் : 1911
போரினால் பாதிக்கப்பட்ட ஈரானுக்காக காஷ்மீர் மக்கள் தங்கம், பணம் மற்றும் செப்புப் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை நன்கொடையாக வழங்கினார். இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு, இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு இடையேயான போர் 24வது நாளாக நீடித்து வருகிறது. இருதரப்பு படைகளும் மாறி மாறி ஏவுகணை மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 13 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஈரானில் 1200 க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் ஈரானுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான அடிப்படையில் மருந்து உள்ளிட்ட உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. அரசு சார்பில் அத்தியாவசிய மருந்து பொருட்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பணம், பொருட்களை தானமாக அளித்து வருகின்றனர்.
குறிப்பாக ஈரான் மக்களுக்கு உதவுவதற்காக காஷ்மீர் மக்கள் தங்களது சேமிப்புகளை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். இதற்காக காஷ்மீரில் ஆங்காங்கே மசூதி அருகே முகாம்கள் அமைக்கப்பட்டு நன்கொடைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. ரமலான் பண்டிகைக்கு பிறகு, ஞாயிறன்று, காஷ்மீரில் வீடு வீடாக சென்று இளைஞர்கள் நன்கொடை வசூலித்து ஈரானுக்கு அனுப்பிவருகின்றனர்.
ஆண்கள், பெண்கள் முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் தங்கள் வசமிருந்த சேமிப்புகளை ஈரானுக்கு நன்கொடையாக அளித்தனர். புட்காமில் உள்ள இமாம் ஜமான் மசூதியில் நடந்த சிறப்பு முகாமில், பல பெண்கள் தங்களது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும் பணத்தையும்,செம்பு பொருட்களையும் நன்கொடையாக வழங்கினர்.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நன்கொடை அளித்த பெண்கள், குழந்தைகள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு, ஈரான் நன்றி கூறியுள்ளது அந்த பதிவில் ஈரான் தூதரகம் கூறியிருப்பதாவது:
மனிதாபிமான உதவிகளை வழங்கி ஈரான் மக்களுக்கு உறுதுணையாக நின்ற காஷ்மீர் மக்களுக்கும் இந்தியாவுக்கும் நன்றி. இந்தக் கருணை மற்றும் மனிதாபிமானத்தை ஈரான் என்றும் மறக்காது. இக்கட்டான போர் சூழலில் இந்தியாவின் மனிதாபிமான உதவிக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire