இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு
23 பங்குனி 2026 திங்கள் 16:54 | பார்வைகள் : 1968
பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.
இந்த அதிகரிப்பையடுத்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30 ரூபாவாக அமையும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின் புதிய விலை 130 ரூபாவாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஏனைய அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவினால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire