Paristamil Navigation Paristamil advert login

தமிழக சட்டசபை தேர்தல்; ஏப்ரல் 6 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

தமிழக சட்டசபை தேர்தல்; ஏப்ரல் 6 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

26 பங்குனி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 1431


234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ந்தேதி அறிவித்தது.  

இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.  இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும்.  இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, நட்சத்திர பேச்சாளர்கள் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  

தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்ட செய்தியில், 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள் 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் 06.04.2026 (திங்கட்கிழமை) வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

உ.பி.:  அயோத்தி ராமர் கோவில் பக்தர்கள் வசதிக்காக மார்ச் 27-ல் பொது விடுமுறை - அரசு அறிவிப்பு

1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ், பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை), 01.04.2026 (புதன்கிழமை), 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது.  

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2