மேற்கு ஆசிய போர் விவகாரம்: அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
27 பங்குனி 2026 வெள்ளி 07:25 | பார்வைகள் : 1458
ஈரான் மீதான போரின் காரணமாக உலக நாடுகள் எரிபொருள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன. ஆனால் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பு நாடுகளுடனும் நட்புறவை சிறந்த முறையில் பேணி வருவதால் இந்தியா அந்த நெருக்கடியில் இருந்து ஓரளவு தப்பி வருகிறது.
இந்தநிலையில், பிரதமரின் வெளியுறவு நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுபற்றி பேசினார். எரிபொருள் வினியோகம் எந்த அளவில் இருக்கிறது, வெளியுறவு பேச்சுவார்த்தைகள் எப்படி நடந்துள்ளன? என்பது பற்றி அவர் விளக்கம் அளித்தார்.
இந்த பிரச்சினையை சமாளிக்க மாநிலங்களின் ஒத்துழைப்பையும் கேட்டார். கொரோனா காலத்தைப் போல 'டீம் இந்தியா' ஒருங்கிணைப்பு தேவை என அவர் குறிப்பிட்டார். இதுபோல இந்த விஷயத்துக்காக அனைத்துக்கட்சி தலைவர்களையும் அழைத்து நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுட னும் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடுகிறார். மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் மாநிலங்கள் செய்திருக்கும் தயார்நிலைகள் மற்றும் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து அவர் ஆய்வு நடத்துவார் என கூறப்படுகிறது.
இந்த கலந்துரையாடலில் தமிழ்நாடு உள்பட தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பங்கேற்க மாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பின்னர் நடைபெறும் ஒரு கூட்டத்தில் அமைச்சக அதிகாரிகளோடு பேசுவார்கள் என தெரிகிறது.
முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி, மேற்கு ஆசிய மோதல் தொடர்பாக சந்திப்பு நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire