சிரித்துக் கொண்டே அழுகிறோம்: தி.மு.க., அணியில் ம.தி.மு.க., விரக்தி
27 பங்குனி 2026 வெள்ளி 11:36 | பார்வைகள் : 1811
தி.மு.க., அளித்த தொகுதி எண்ணிக்கையில் திருப்தி அடையாத நிலையில், 'சிரித்துக் கொண்டே அழுவதாக' ம.தி.மு.க., தெரிவித்துள்ளது.
தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இரட்டை இலக்கத்தில் தொகுதியை எதிர்பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த சட்டசபை தேர்தலை விட, ஒரு தொகுதியை குறைத்து தலா ஐந்து தொகுதிகள் தரப்பட்டுள்ளன.
ம.தி.மு.க.,வுக்கு கடந்த முறை ஆறு தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தற்போது நான்கு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியதோடு, ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடவும், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், புதிதாக கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க.,வுக்கு 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்பட்டுள்ளன.
இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சு, தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் துவங்கி உள்ளது. ம.தி.மு.க.,வுக்கான தொகுதிகள் விபரம் குறித்து, இரு தரப்பும் இடையே நேற்று பேச்சு நடத்தப்பட்டது.
நேற்றைய பேச்சுக்கு பின், ம.தி.மு.க., அவைத்தலைவர் அர்ஜுனராஜிடம், தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், ''சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம். எங்களின் தகுதிக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்படவில்லை,'' என்றார்.
ம.தி.மு.க.,வை தொடர்ந்து, கொங்கு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் தி.மு.க., தரப்பில் பேச்சு நடந்தது.
தனியரசு வெளியேறுகிறாரா?
அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகி, தி.மு.க., கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு இணைந்தார். அவருக்கு தி.மு.க., தலைமை, ஒரு தொகுதியை உறுதி செய்ததாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள சங்ககிரி அல்லது பரமத்திவேலுார் தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
ஆனால், சென்னை அறிவாலயத்தில் தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினரை, நேற்று முன்தினம் தனியரசு சந்தித்தபோது, 'முதல்வர் ஸ்டாலின் தங்களுக்கு தொகுதி ஒதுக்க உத்தரவு தரவில்லை' என கூறப்பட்டதால், அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில் தொடருவதா என்பது குறித்து, இன்று தன் முடிவை அறிவிக்க உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire