கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட எதிர்பார்ப்பு
27 பங்குனி 2026 வெள்ளி 12:40 | பார்வைகள் : 1810
கோவை வடக்கு தொகுதியில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க., நிர்வாகிகளே எதிர்பார்க்கின்றனர்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ. தனித்து போட்டியிட்டது. அண்ணாமலை, 4.50 லட்சம் ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பெற்றார். 492 பூத்களில் தி.மு.க.வை விட அதிக ஓட்டு பெற்றிருந்தார். வடக்கில் மட்டும் 105 பூத்களில் தி.மு.க.வை விட அதிக ஓட்டுகள் பா.ஜ.வுக்கு கிடைத்திருந்தது. அண்ணாமலை பிரசாரத்தால், அத்தேர்தலில், திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் கூடுதல் ஓட்டு கிடைத்தது.
கோவை வடக்கில் பா.ஜ.வை சேர்ந்த வேறு நபர்கள் போட்டியிட்டால், அ.தி.மு.க.வினர் தேர்தல் பணியாற்றியே, ஜெயிக்க வைக்க வேண்டும். தெற்கில் வானதியை ஜெயிக்க வைத்ததுபோல், பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அண்ணாமலை களமிறங்கினால் அப்படிப்பட்ட சூழல் வராது. அவரது பிரச்சாரத்தால் கோவை வடக்கு மட்டுமின்றி, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளிலும் அ.தி.மு.க. - பா.ஜ. வேட்பாளர்களுக்கு கூடுதல் பலம் கிடைக்கும்; அதிக ஓட்டு விழ வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire