Paristamil Navigation Paristamil advert login

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு

27 பங்குனி 2026 வெள்ளி 13:22 | பார்வைகள் : 1456


மேற்காசிய போரால் பாதிக்கப்பட்டு உள்ள எண்ணெய் நிறுவனங்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

கடந்த பிப்., 28ல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே, கடந்த நான்கு வாரங்களாக தொடரும் மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இது, இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்தி உள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 13 ரூபாயில் இருந்து 3 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயில் பூஜ்ஜியமாக்கியுள்ளது. இதனால் டீசலுக்கு கலால் வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு, எண்ணெய் நிறுவனங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இந்த நடவடிக்கை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க வழங்கப்பட்டு இருக்கிறது. கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

ஏற்கனவே எரிபொருளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. இந்தியாவில் 60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பும், 74 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பும் உள்ளது என  மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2