Paristamil Navigation Paristamil advert login

வியட்நாமில் எரிபொருட்கள் மீதான வரிகள் நீக்கம்

வியட்நாமில் எரிபொருட்கள் மீதான வரிகள் நீக்கம்

27 பங்குனி 2026 வெள்ளி 08:40 | பார்வைகள் : 1341


எரிபொருட்கள் மீதான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி மற்றும் சிறப்பு நுகர்வு வரி ஆகியவற்றை வியட்நாம் நிதி அமைச்சு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் மீதான போரினால் உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், வியட்நாம் தமது உள்நாட்டு சந்தையை ஸ்திரப்படுத்துவதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

பெற்றோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான இந்த வரி நீக்கம் எதிர்வரும் ஏப்ரல் 15-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.