அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோல்- சுவிட்சர்லாந்தை வீழ்த்தி ஜேர்மனி வெற்றி
28 பங்குனி 2026 சனி 06:09 | பார்வைகள் : 1840
சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான Friendlies கால்பந்து போட்டியில் ஜேர்மனி த்ரில் வெற்றி பெற்றது.
ஜேர்மனி, சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான Friendlies கால்பந்து போட்டி செயின்ட் ஜேகப் பார்க் மைதானத்தில் நடந்தது.
ஆட்டத்தின் 17வது நிமிடத்திலேயே, சுவிஸ் வீரர் டேன் நோயி (Dan Ndoye) மிரட்டலாக கோல் அடித்து ஜேர்மனி அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அடுத்து ஜேர்மனியின் ஜோனதன் டா (Jonathan Tah) 26வது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்தார்.
பின்னர் 41வது நிமிடத்தில் ப்ரீல் எம்போலோ (சுவிஸ்) அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோல் அடித்தார்.
அதற்கு பதிலடியாக 45+2'வது நிமிடத்தில் ஜேர்மனியின் செர்ஜ் ஞாப்ரே (Serge Gnabry) தனியாளாக பந்தை தூக்கிவிட்டு கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் ஜேர்மனி தரப்பில் அடிக்கப்பட்ட கோல் பார்வையாளர்களை மிரள வைத்தது.
கார்னரில் இருந்து செர்ஜ் ஞாப்ரே பாஸ் செய்த பந்தை உடனே விர்ட்ஸ் (Wirtz), இடதுபுறத்தில் இருந்து கடினமான கோணத்தில் நீண்ட தூரத்தில் இருந்து தனது வலது காலால் அடித்து கோலாக மாற்றினார்.
79வது நிமிடத்தில் சுவிஸின் ஜோயல் மொன்டெய்ரோ அபாரமாக செயல்பட்டு கோல் அடிக்க, கோல்கள் சமன் ஆனதால் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஆனால், அடுத்த 6 நிமிடங்களில் ஜேர்மனி வீரர் ஃப்ளோரியன் விர்ட்ஸ் (Florian Wirtz) கோல் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். ஜேர்மனி அணி ஆட்டநேர முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire