பஹ்ரைன் அவசரகால கடல் முற்றுகை அறிவிப்பு
30 பங்குனி 2026 திங்கள் 08:19 | பார்வைகள் : 1493
ஈரானின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தனது கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பஹ்ரைன் அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடல்வழிப் போக்குவரத்துத் தடையை விதித்துள்ளது.
பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, பிராந்திய கடல் எல்லைக்குள் பயணங்கள் மேற்கொள்வதற்குப் பின்வரும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தினமும் மாலை 6:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை (உள்ளூர் நேரம்). மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.
"ஈரானின் தெளிவான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்" காரணமாகவே இந்த அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய பதற்றமான சூழல் பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் அங்கு வசிக்கும் ஏனைய குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச கடல் வழித்தடங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பஹ்ரைனின் இந்த அறிவிப்பு பிராந்திய பாதுகாப்பில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan