இலங்கையில் மின்சார கட்டணம் உயர்வு
30 பங்குனி 2026 திங்கள் 16:23 | பார்வைகள் : 1778
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிப்பதற்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், நுகர்வோர் பயன்படுத்தும் மின்சார அலகுகளின் அடிப்படையில் இம்முறை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சதவீதம் மாறுபட்டுள்ளது.
இந்த மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது
அதன்படி 0 - 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது.
மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
61 - 91 அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்த 120 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
91 - 120 அலகுகளுக்கு மின்சாரக் கட்டணம் 7.1% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாதக் கட்டணம் 420 ரூபாவினால் உயரும்.
180 அலகுகளுக்கு மேல் இந்த கட்டத்திற்கு அதிகப்படியான கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மின்சாரக் கட்டணம் 25% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான சலுகை: மாதாந்த மின்சார நுகர்வு 180 அலகுகளுக்குக் குறைவாகக் காணப்படும் மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அதே பிரிவில் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மாத்திரம் 9.6% கட்டண உயர்வை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire