கானா அணிக்கு எதிரான நட்புப் போட்டியில் ஜேர்மனி அணி வெற்றி
31 பங்குனி 2026 செவ்வாய் 13:55 | பார்வைகள் : 1540
கானா அணிக்கு எதிரான நட்புப் போட்டியில் ஜேர்மனி அணி வெற்றி பெற்றது.
ஜேர்மனி மற்றும் கானா அணிகளுக்கு இடையிலான நட்பு கால்பந்து போட்டி Stuttgart-யில் நடந்தது.
முதல் பாதியில் ஜேர்மனி அணி பந்தை அதிக நேரம் தன்வசம் வைத்திருந்ததுடன், ஆடுகளத்தில் ஆதிக்கத்தையும் கொண்டிருந்தது.
ஆட்டத்தின் 45+3வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில், ஜேர்மனியின் கை ஹவேர்ட்ஸ் (Kai Havertz) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 70வது நிமிடத்தில் கானா அணி வீரர் அப்துல் ஃபதாவு (Abdul Fatawu) ஜேர்மனிக்கு பதிலடி கோல் அடித்தார்.
இதனால் ஜேர்மனி அணி வீரர்கள் வெற்றிக்கான கோலினை அடிக்க போராடினர். ஒருவழியாக ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் டெனிஸ் உண்டாவ் (Deniz Undav) கோல் அடித்தார்.
இதன்மூலம் ஜேர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தியது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire