வேட்பாளர்களை பாஜ பார்லி குழு முடிவு செய்யும்: நயினார் நாகேந்திரன்
1 சித்திரை 2026 புதன் 09:18 | பார்வைகள் : 1451
பாஜ வேட்பாளர்களை , கட்சியின் பார்லிமென்ட் குழு முடிவு செய்யும். இன்னும் 2 நாட்களில் வேட்பாளர் பட்டியல் வரும் என எதிர்பார்க்கிறோம் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜ தேசிய கட்சி. எங்களுடைய தேர்வை அனுப்பி உள்ளோம். பாஜ பார்லி குழு கூடி முடிவு செய்யும். அதனைத்தொடர்ந்து இன்னும் 2 நாட்களில் வேட்பாளர் பட்டியல் வரும் என எதிர்பார்க்கிறோம்.
இன்றைக்கு தான் திமுக அரசு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம்.பாலியல் வன்கொடுமைக்கான ஆட்சி, அதை கண்டிக்காத, தடுக்க முடியாத ஆட்சி, சட்டம் ஒழுங்கு சரியில்லாத ஆட்சி, கடந்த ஐந்தாண்டுகளில் தங்களில் தேர்தல் அறிக்கையில் 80 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றாத அரசு, பெண்களுக்கு எதிரான அரசு, மாணவர்கள் புத்தகத்திற்கு பதிலாக கஞ்சா கொண்டு செல்லும் நிலை, திமுகவினரே பல பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். மோசமான ஆட்சி.
மக்கள் நிம்மதியாக வாழ முடியாத சூழல், பெண்கள் பகல் நேரத்தில் நடக்க முடியாத சூழ்நிலை. இதை மக்கள் விரோத அரசாக மக்கள் பார்த்து கொண்டுள்ளனர். ஏப்.,23ம் தேதி மக்கள் முடிவு எழுதுவார்கள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire