ஆப்பிளின் 50 வது பொன்விழா ஆண்டு - பிரமிப்பூட்டும் iPhone கடந்து வந்த பாதை
1 சித்திரை 2026 புதன் 12:06 | பார்வைகள் : 2363
ஆப்பிள் நிறுவனம் தனது 50 வது பொன்விழா ஆண்டை இன்று சிறப்புடன் கொண்டாடுகிறது.
சிறிய கணினி நிறுவனத்தில் இருந்து தொடங்கி இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.
2026 ஏப்ரல் 1ம் திகதியான இன்று 50 வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி இடத்தையும் பெருமையை நிலைநாட்டி உள்ளது.
ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் தன்னுடைய புரட்சியை தொடங்கியது.
அன்று ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோன் அமெரிக்காவில் 499 டொலருக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
2008ம் ஆண்டு iPhone 3G அறிமுகப்படுத்தப்பட்டது, 22 நாடுகளில் வேகமான இணைய வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் மூன்று நாட்களில் 10 லட்சத்திற்கும் அதிகமாக விற்று தீர்ந்தது.
2009ம் ஆண்டு iPhone 3GS என்ற புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது, இதில் S என்பது வேகம்(Speed) என்பதை குறிப்பதாக இருந்தது.
2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 4, கண்ணாடி மற்றும் எஃகு கலந்த வடிவமைப்பால் நேர்த்தியாக விற்பனைக்கு வந்தது, அதுமட்டுமின்றி ரெடினா டிஸ்ப்ளே-வும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2011ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் Siri என்ற முன்னோடி குரல் உதவியாளர் அம்சத்துடன் iPhone 4S மாடலை அறிமுகப்படுத்தி ஸ்மார்ட்போன் சந்தையில் புரட்சியை வெடிக்க வைத்தது.
2012ம் ஆண்டு iPhone 5 மாடல் 4G LTE என்ற இணையதள வேகத்துடன் 4-இன்ச் திரையுடன் வெளிவந்தது.
2014 முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஐபோன் பெரிய திரை மற்றும் மேம்பட்ட பற்றரி திறன்களுடன் கூடிய iPhone 6, iPhone 6 plus, iPhone 7 ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தியது.
2017ம் ஆண்டு iPhone 8 மற்றும் iPhone X ஆகிய மாடல்கள் அறிமுகமானது, இதில் முதல் முறையாக FaceID, OLED திரை ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.
2018ம் ஆண்டு பிரீமியம் iPhone XS மற்றும் மலிவு விலையில் XR மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2019ம் ஆண்டு iPhone 11, 2020 மற்றும் 2021ம் ஆண்டில் iPhone 12 மற்றும் iPhone 13 மாடல்கள் 5G வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
2022ம் ஆண்டு பெரிய திரைகளை கொண்ட Plus மாடல்கள் மீண்டும் விற்பனைக்கு வந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire