மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே அரசின் பொறுப்பு; பிரதமர் மோடி
2 சித்திரை 2026 வியாழன் 13:00 | பார்வைகள் : 1526
மக்களின் வாழ்க்கை முறையும், வாழ்க்கைத் தரமும் தொடர்ந்து மேம்படும் வகையில் அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
eகர்மயோகி சப்தா எனப்படும் அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வாரம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது; வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க பொருளாதார வளர்ச்சி, நவீன உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம், மற்றும் திறமையான பணியாளர்கள் தேவைப்படுகிறது. வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா எவ்வாறு முன்னேறுகிறது என்பதை நாம் தெளிவாகக் காண முடியும்.
இந்தக் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. மக்களின் வாழ்க்கை முறையும், வாழ்க்கைத் தரமும் தொடர்ந்து மேம்படும் வகையில் அரசு நிர்வாகம் இருக்க வேண்டும். இதுவே நமது சவால். நமது இலக்கு 2047. நம்முடைய தற்போதைய செயல்பாடுகள் நாட்டின் முன்னேற்றத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.
மாறிவரும் இந்த உலகில் நாடு முன்னேறிச் செல்லும்போது, பொதுச் சேவைகளை அறிந்து, அதனை ஒரு மக்கள் சேவையாக மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire