கருத்துக்கணிப்பு: மத்திய கிழக்கு போரால் 87% பிரெஞ்சு மக்கள் கவலை – கணிசமான உயர்வு!!
3 சித்திரை 2026 வெள்ளி 07:45 | பார்வைகள் : 4175
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போரின் தாக்கம் பிரெஞ்சு மக்களின் மனநிலையிலும் வெளிப்படையாக காணப்படுகிறது. Elabe நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி, 87% மக்கள் தற்போதைய சூழ்நிலையைப் பற்றி கவலைப்படுகின்றனர். இதில் 44% பேர் மிகவும் கவலையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் Donald Trump இந்த போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்கக்கூடும் என கூறியுள்ளதும் மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு நிலைப்பாடும் முக்கிய கவலையாக மாறியுள்ளது. பரிஸில் உள்ள Bank of America வங்கியை இலக்காகக் கொண்ட தாக்குதல் முயற்சி காவல்துறையினரால் தடுக்கப்பட்டதுடன், Goldman Sachs அலுவலகத்திற்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இதனால் 82% மக்கள் இந்த போர் பிரான்சில் தாக்குதல் அபாயத்தை அதிகரிக்கிறது என நம்புகின்றனர்.
மேலும், ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இதேபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இதற்கிடையில், பொருளாதார தாக்கம் மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது.
ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஏற்பட்ட தடைகள் காரணமாக எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டீசல் விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என அச்சப்படுகின்றனர். இதனால், வாழ்க்கைச் செலவு உயர்வு மக்களின் மிகப்பெரிய கவலையாக உருவெடுத்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire