தவெக குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெறும்: சொல்கிறார் செங்கோட்டையன்
4 சித்திரை 2026 சனி 08:24 | பார்வைகள் : 1521
தவெக குறைந்தது 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என கோபிசெட்டிபாளையம் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:
சீமான் ஆட்சிக்கு வரப்போவதில்லை; அதனால் அவர் கருத்துக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. 9 முறை ஆட்சியில் இருக்கிற போது, ஆட்சி அதிகாரம் யாருடைய தலைமையில் இருக்கிறதோ, அவர்களின் கருத்தை கேட்டு தான் இயங்கி ஆக வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் எனது கருத்துகளை சொல்லி விமர்சனங்கள் செய்ய இயலாது. இன்றைக்கு இருக்கும் நிலை, நாம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இவர்கள் இடத்தில் இருக்கிறது.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் நாடு செழிக்க, மக்கள் செழிக்க எல்லோரும் எல்லாம் பெறுவதற்கு அவர் எல்லா வகையிலும் உதவியாக இருப்பார். தவெக குறைந்தது 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும்.
தவெக கூட்டத்திற்கு அரசு முழுமையான பாதுகாப்பை அளிக்கவில்லை. திருச்சியில் முழு பாதுகாப்பு அளித்தார்கள், அதற்கு நன்றி. எல்லோருக்கும் கனவுகள், ஆசை இருக்கிறது. அதை நிறைவேற்றுவது மக்கள் தான். மாற்றம் வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசை.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் மாற்றம் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் எல்லோருடைய கனவு. தவெக தலைவர் விஜய்க்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தடுமாறுகிறது. இதுபோன்ற நிலை இந்தியாவிலேயே எந்த தலைவருக்கும் வந்தது இல்லை.
முன்னாள் சபாநாயகர் தனபால் இயக்கத்துக்கு சோதனை வருகின்ற போது 2 முறை முன்னின்று காப்பாற்றினார்; அவருக்கு இடமில்லையென்றால் எவ்வளவு தூரம் இருக்கிறது, என்று புரிந்துகொள்ள வேண்டும்; பணம் இருந்தால் தான் அதிமுகவில் இடம். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire