Paristamil Navigation Paristamil advert login

Le Bourget: முஸ்லிம் மாநாட்டிற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்!!

Le Bourget: முஸ்லிம் மாநாட்டிற்கு  அனுமதி வழங்கிய நீதிமன்றம்!!

3 சித்திரை 2026 வெள்ளி 21:55 | பார்வைகள் : 5587


பரிஸ் அருகே நடைபெறவிருந்த பிரான்ஸ் முஸ்லிம்களின் ஆண்டு மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நிர்வாக நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த நிகழ்வு Parc des expositions de Paris-Le Bourget (Seine-Saint-Denis) பகுதியில் ஏப்ரல் 3 முதல் 6 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

பரிஸ் காவல் துறைத்தலைவர், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்த கூட்டத்தைத் தடை செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இந்தத் தடைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.

நிகழ்வை ஏற்பாடு செய்த அமைப்பின் வழக்கறிஞர், இந்தத் தடை கூட்டச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறி அவசர மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, நீதிமன்றம் தடையை இடைநிறுத்த அனுமதி வழங்கியது.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2