“இந்த நாடு எங்களுடையது” – இனவெறிக்கு எதிராக Saint-Denis நகரில் மாபெரும் எழுச்சி பேரணி!!
4 சித்திரை 2026 சனி 15:38 | பார்வைகள் : 5053
Saint-Denis நகரில் இனவெறிக்கு எதிராக நடத்தப்பட்ட « grand rassemblement citoyen » “பெரும் குடிமக்கள் ஒன்றுகூடல்” பேரணி 4ம் திகதி இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நகர மன்றம் முன்பாக ஆரம்பமானது. நகரத்தின் மேயர் Bally Bagayoko அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, இனவெறி மற்றும் பாகுபாட்டுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து இனவெறி விவாதத்தின் மையமாக மாறியுள்ள Bagayoko-வுக்கு ஆதரவாக பல அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் கலந்து கொண்டன. Jean-Luc Mélenchon தொடக்க உரையாற்றி, “இனவெறி கருத்துகள் திறந்தவெளியில் வெளிப்படத் தொடங்கியுள்ளன” எனக் கண்டனம் வெளியிட்டார். “இந்த நாடு எங்களுடையது” என்றும் அவர் வலியுறுத்தினார்.
10,000 முதல் 20,000 பேர் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தில், இடதுசாரி அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆனால் அரசாங்கத்தின் எந்த அமைச்சரும் நேரில் பங்கேற்கவில்லை. Aurore Bergé வராததை குறித்து Bagayoko வருத்தம் தெரிவித்ததுடன், தொலைபேசி மூலம் ஆதரவு தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்த விவகாரத்தில் மௌனம் காத்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. சமீபத்தில் CNews தொலைக்காட்சியில் Bagayoko குறித்து வெளியான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. இனவெறி மற்றும் அனைத்து வகையான பாகுபாடுகளுக்கும் எதிரான இந்தப் போராட்டம் தொடரும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire