Paristamil Navigation Paristamil advert login

கனடாவின் பிராம்ப்டனில் துப்பாக்கிச்சூடு- 2 பேர் உயிரிழப்பு

கனடாவின் பிராம்ப்டனில் துப்பாக்கிச்சூடு- 2 பேர் உயிரிழப்பு

4 சித்திரை 2026 சனி 15:57 | பார்வைகள் : 1935


கனடாவின் பிராம்ப்டனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு கனடாவின் பிராம்ப்டனில் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரூதர்போர்டு சாலை மற்றும் வேப்ரிட்ஜ் டிரெயில் சந்திப்பிற்கு அருகே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதை அடுத்து இரவு 10.30 மணிக்கு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கு துப்பாக்கிச் சூடு காயங்களுடன் இருவரை கண்டுபிடித்தனர்.

அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் இருவரும் பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர் ஆண் ஒருவரும், சிறுவன் ஒருவரும் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பொலிஸார் வருவதற்கு முன்பு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் தொடர்பான அடையாளங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

எழுத்துரு விளம்பரங்கள்