Paristamil Navigation Paristamil advert login

அதிமுக அமித் ஷா திமுகவாக மாறி விட்டது; கனிமொழி விமர்சனம்

அதிமுக அமித் ஷா திமுகவாக மாறி விட்டது; கனிமொழி விமர்சனம்

6 சித்திரை 2026 திங்கள் 08:54 | பார்வைகள் : 1556


அ.தி.மு.க., தற்போது அமித் ஷா தி.மு.க.,வாக மாறிவிட்டது, என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி விமர்சித்தார்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதி தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் சாமிநாதனை ஆதரித்து, தி.மு.க., - எம்.பி., கனிமொழி வெள்ளகோவிலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:

மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கும் அமைச்சர் சாமிநாதன், தி.மு.க., சார்பில் வேட்பாளராக நிற்கிறார். அவரை வெற்றி பெறச்செய்ய வேண்டும். பதவிக்காக தன்னை வளர்த்த கட்சிக்கும், காலில் விழுந்தபோது, பதவி கொடுத்தவர்களுக்கும் துரோகம் இழைத்தவர் பழனிசாமி. இன்றைய நிலையில், அ.தி.மு.க., என்பது அமித் ஷா தி.மு.க.,வாக மாறி நிற்கிறது.

தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் அந்த கூட்டணியின் வேட்பாளர்களை தேர்தல் முடிந்த பிறகு தொகுதியில் பார்க்க முடியாது. தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலினால் மட்டுமே முடியும். தேர்தல் களத்தில் நிற்கும் மற்றவர்களுக்கு போடும் ஓட்டு வீணானவை.

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வலிமை தி.மு.க.,வுக்கு மட்டுமே உண்டு என்பதை உணர்ந்து, உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு, கனிமொழி பேசினார்.

1 நாள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2