விஜயை பயன்படுத்தி ஓட்டுகளை பிரிக்க திமுக முயற்சி: பியூஷ் கோயல்
6 சித்திரை 2026 திங்கள் 11:08 | பார்வைகள் : 1396
மக்களின் செல்வாக்கை இழந்துவிட்ட திமுக, விஜயை பயன்படுத்தி ஓட்டுகளை பிரிக்க முயற்சி செய்கிறது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சிறப்பான பிரசாரம் துவங்கியுள்ளது. பாஜ வேட்பாளர்கள் அனைவரும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். களத்தில் உற்சாகம் நிலவுகிறது. தேச விரோத மற்றும் தமிழக விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள். தேஜ கூட்டணி வெற்றி பெற்று, தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கும். மாநில மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சியை வழங்குவோம்.
இந்த தேர்தலில், தேஜ கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டியிருக்கும். மக்களின் செல்வாக்கு இழந்துவிட்டோம். மக்கள் தோற்கடிக்க முடிவு செய்துவிட்டனர் என்பதை திமுக புரிந்து கொண்டுள்ளது. இதனால் விஜயை முன்னிறுத்தி, திமுக எதிர்ப்பு ஓட்டுகளையும், மக்களின் கோபத்தையும் பிரிக்க முயற்சி செய்கிறார்கள்.
மக்கள் மிகவும் புத்திசாலிகள். தங்களுக்கு எது நல்லது தேவை என்பதை புரிந்து கொள்வார்கள். அவர்கள் இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டார்கள். தேஜ கூட்டணிக்கு ஓட்டு போட்டு ஆட்சிக்கு கொண்டு வருவார்கள். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire